ஞாயிறு, 16 ஜூலை, 2017

குஜராத்தின் சுவாமி நாராயன் கோயில்




குஜராத்தின் சுவாமி நாராயன் கோயில் அர்ச்சகர் பக்த சுவர்ப் வீட்டில் காவல்துறை நுழைந்து சோதனையிட்டபோது அடடா! கிடைத்த பொருள்கள் என்னென்ன தெரியுமா?

பக்திப் பரவசம் ஊட்டும் நூல்களா? காண்டா மணிகளா? உருத்திராட்ச மணிகளா? திருநீறா? குங்குமமா? ஜவ்வாதா? சந்தனமா? சாம்பிராணியா? சூடக் கட்டிகளா?

அல்ல... அல்ல... அவை எல்லாம் எதற்கு வேண்டும்? பக்த மடச் சாம்பிராணிகளுக்குத்- தானே இவை தேவை?

இவனோ கோயிலை காமக் கோட்டமாக்கிய காமாந்தக்காரனாயிற்றே! பகவான் வீட்டை பஞ்சணையாக்கிய பரமாத்மாவாயிற்றே! அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கொஞ்சிக் குலாவிய கோகுல கிருஷ்ணனின் “குட்டிச்’’ சீடனாயிற்றே.

அத்தகையவன் வீட்டில் என்ன கிடைக்க வேண்டுமோ அவை எல்லாம் கிடைத்தன.

ஆபாச சி.டி.க்கள், காம சூத்திரா புத்தகங்கள், நிர்வாண ஒளிப்படங்கள், ஆணுறைகள் (நிரோத்) கருத்தரிப்பைத் தடுக்கும் மாத்திரைகள் _ இவை குவியல் குவியலாகக் கிடைத்தனவாம் _ ஆண்டவன் பக்கத்தில் இருந்து அனுதினமும் பூசை நடத்தும் பூசாரியின் வீட்டில்!

அவனைப் பொறுத்த வரையில் பரமாத்மாவிடம் ஜீவாத்மாவும் ஒன்று சேர்வது இப்படித்தான். அர்ச்சகர் பக்தசுவர்ப்பைப் பொறுத்தவரை அவன் ஜீவாத்மா. அழகுப் பெண்கள் எல்லாம் பரமாத்மா. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று சேர்வதுதானே பக்தி. அதனைத் தான் அவன் நாளும் செய்து கொண்டிருந்தான் என்று சங்பரிவார் கும்பல் சொன்னாலும் சொல்லும்.
இந்த சுவாமி நாராயன் கோயிலும் _ அவர்கள் (பா.ஜ.க.) ஆளும் குஜராத்தில் தானே இருக்கிறது.

பாவம், அப்பாவிப் பெண்கள் இந்த அர்ச்சகர்ப் பார்ப்பனர்களிடம் எப்படி சிக்கி இருக்கிறார்கள்? ஆண் குழந்தைகளைத் தருவதாகக் கூறினார்களாம். அவர்களும் அதற்கு ஆசைப்பட்டு அகப்பட்டுக் கொண்டார்களாம். ஆண் என்றால் அமிர்தம். பெண் என்றால் பீத்தை என்கிற மனப்பான்மை பெண்களிடமே இருக்கிறதே. இதற்காகத் தங்கள் மானத்தைக்கூட இழப்பதற்குத் தயாராகி விட்டார்களே!

சிந்தனையில் கூடுகட்டும் பிற்போக்குத்தனமான பாசிகள் எந்தக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்கின்றன என்பதுதான் இங்குக் கவனிக்கப்பட வேண்டியது.

கடவுள், பக்தி, கோயில், மதம் என்பது ஆத்மார்த்தமா _ ஜீவாத்மா _ பரமாத்மா பிரச்சினைகளா? அவையெல்லாம் வசீகரமான வார்த்தை ஜாலங்கள் அவ்வளவுதான்!

நடைமுறையில் மனிதச் சிந்தனைக்கு விலங்கிட்டு விலங்காகவே ஆக்கும் ஒரு வகையான ஏற்பாடு அவை!

இதுவரை எந்தச் சிந்தனை எப்படி இருந்தாலும் குஜராத்தின் சுவாமி நாராயன் கோயில் சமாச்சாரங்கள் யதார்த்தங்களை பதார்த்தங்களாகத் தெரிவித்து விட்டனவா இல்லையா?

(விடுதலை -_ 19.2.2005)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக