ஞாயிறு, 16 ஜூலை, 2017

காந்தி கொலை

கொலை செய்வதைத் தர்மம் என்று உலகில் எந்த மதமாவது   சொல்லியிருக்கிறதா? இந்து மதத்தில்தான் இந்த அசிங்கம்!

இந்தக் கீதையின் சுலோகத்தை எடுத்துக்காட்டி தானே நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் அகிம்சைவாதியான காந்தியாரையே சுட்டுக் கொன்றான்.

அந்த நேரத்தில் மட்டும் தந்தை பெரியார் நினைத்திருந்தால் காந்தியை ஒரு பார்ப்பன வெறியன் சுட்டுக் கொன்று விட்டான்கிளர்ந்து எழுங்கள் என்று  உத்தரவிட்டிருந்தால் _ ஏன் கொஞ்சம் ஜாடை காட்டியிருந்தால்கூட ஒரு அக்ரகாரம் மிஞ்சியிருந்திருக்குமா? ஒரு புழு பூச்சி பரம்பரையை நினைவூட்ட மிச்சம் இருந்திருக்குமா?

அதற்காக தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் காலா காலத்திற்கும் நன்றி கூற வேண்டுமே அக்கிரகாரம்!

அதே நேரத்தில் மும்பையில் என்ன நடந்தது? அக்கிரகாரத்தில் எத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன? பார்ப்பனக் கல்வி நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன?

பார்ப்பானே காந்தியாரைக் கொலை செய்துவிட்டு கொன்றவன் முஸ்லிம் என்று புரளியைக் கிளப்பிவிட்டவர்கள். அரசாங்கத்தார் தந்தை பெரியாரை அழைத்துத்தானே வானொலியில் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டனர். அந்தக் கடமையை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றினாரே!
தந்தை பெரியார் என்ன கட்டளையிட்டார் திராவிடர் கழகத்தினருக்கு?

ஊருக்கு ஊர் கூட்டம் போடச் செய்து தீர்மானம் நிறைவேற்றச் செய்தாரே!

இக்கூட்டமானது உலக மக்களால் போற்றப்பட்டவரும் இந்திய தேசிய காங்கிரஸ் நடப்புக்கு மூலகாரணமாயிருந்து, அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களை சதா சர்வகாலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணமடைந்தது குறித்து தனது ஆழ்ந்த துயரத்தையும், துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இம்மரணத்துக்குக் காரணமாக இருந்த கொலை பாதகனையும் அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக்காட்டிக் கண்டிக்கிறது.

இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவை படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவரும் ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக!

அன்பும், அறிவும், சத்தியமும் என்றும், எங்கும் நிகழ்வதாகுக! அவையேயாவற்றினும் வெற்றி பெறுவதாகும். என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய நிலையத்துக்கும், காந்தியின் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும்; பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுக்கும் அனுப்ப வேண்டியது, செய்தியை எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பவும்.


- .வெ. ராமசாமி

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக