வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் நாடு தழுவிய அளவில் கொண்டாடப்படுகிறது.
அவர் படைப்புக்காக நோபல் பரிசு பெற்றவர்; அவர் எழுதிய ஜன கன மன பாடல்தான் இந்தியாவின் தேசியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் தேசிய கீதமாகக் கொண்டு வரப்படவேண்டும் என்ற கருத்து வந்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர்கள் எம்.என்.
ராய்,
தாகூர் போன்றவர்கள் ஆவார்கள். அதன் மதவெறி நாற்றம் அவர்களை அவ்வாறு செயல்படத் தூண்டியது.
ஜன கன மன பாடலில் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பன்மொழி நாடுகளையெல்லாம் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒரு தகவலை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் ஆய்வு மய்யம் ஒன்றை நடத்தி வந்தார். அவரின் படைப்புகளுள் விழுமியது திரவிடியன் என்சைக்ளோபீடியா என்பதாகும்.
அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷியைச் (பி.ஜே.பி.)
சந்தித்து அந்த நூலை அன்பளிப்பாக வழங்கினார் வி.அய்.
சுப்பிரமணியம். நூலைப் பார்த்த மாத்திரத்திலேயே அமைச்சரான ஜோஷி பார்ப்பனர், திரவிடியன் என்ற சொல்லை நீக்கிவிடலாமே என்று கூறினாராம். சற்றும் தாமதியாமல் அறிஞர் வி.அய்.
சுப்பிரமணியம் அவர்கள் நீங்கள் தேசிய கீதத்திலிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்று பதிலடி கொடுத்தார். (ஆதாரம்: DLA News 2003, பிப்ரவரி)
அந்த வகையில் கவி தாகூர் இந்தியா என்பது பல மொழிகள், பல இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பதை மறைக்காமல் அந்தப் பாடலில் பதிவு செய்துள்ளார்.
மாஸ்கோவில் உள்ள பேராசிரியர் பீரிட்ரோ என்பவர் கவி தாகூருக்குக் கீழ்க்கண்ட தந்தியை அனுப்பினார் (ஆண்டு 1929).
ருசியாவில் கைத்தொழில், விவசாயம், விஞ்ஞான ஆராய்ச்சி, பல்கலைக் கழகங்கள், பாடசாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைந்ததற்கு நீங்கள் என்ன காரணம் சொல்லுகிறீர்கள்? அடுத்த அய்ந்து வருடங்களுக்கு உங்களுக்குள்ள வேலைத் திட்டம் என்ன? அவைகளுக்குத் தடையாது? என்பதுதான் அந்தத் தந்தியின் வாசகம்.
அதற்குத் தாகூர் அனுப்பிய தந்தி வாசகம் வருமாறு:
உங்களுடைய வெற்றிக்குக் காரணம் தனிப்பட்ட நபர்களிடமிருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததாகும். நாங்கள் கீழ் நிலையில் இருப்பதற்கு எங்களுக்குச் சமூகத் துறையிலும், அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள பைத்தியக்காரத்தன்மைகளும், வெறிபிடித்த தன்மைகளும், கல்வியில் முன்னேற்றம் அடையாததும்தான் காரணம். (குடிஅரசு, 29.11.1931).
தாகூர் அன்று கூறியது இன்றும் பொருந்தும்தானே!
19.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக