ஞாயிறு, 16 ஜூலை, 2017

கோவில்களில் வழிபாட்டு மொழி

தமிழ் வேண்டும் துக்ளக் தலையங்கம்,

கோவில்களில் வழிபாட்டு மொழி தமிழ் வேண்டும், என்று சொன்னால், மொழி ஆர்வமா? மத துவேஷமா? எனும் தலைப்பில் துக்ளக் (18.11.1998) தலையங்கம் தீட்டியது:

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும்; புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல. ஒலிக்கு!

தமிழ் வழிபாட்டு உரிமை பிரச்சினையில் ஆனந்த விகடன் (8.11.1998) என்ன எழுதியது?
விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மக்களைத் திசை திருப்பும் பழைய வார்த்தைதான் என்று எழுதுகிறதே.

இந்து முன்னணி ராமகோபால அய்யர்வாள் என்ன பேசுகிறார்?
தமிழ் அர்ச்சனைனால் விலைவாசி குறைந்து விடுமா? (திருச்சியில் 15.11.1998)

காஞ்சி சங்கராச்சாரியாரும் இதே வார்த்தைகளை குமுதத்தில் பேட்டியாகச் சொல்லுகிறார்.

தமிழ்-, தமிழர் உணர்வு அடிப்படையில் எதைச் செய்தாலும் இவற்றால் விலைவாசி குறையுமா என்று கேட்கிறார்களே - திருப்பி நம்மால் கேட்கமுடியாதா? கோயில் கும்பாபிஷேகம் செய்கிறீர்களே, தேரோட்டம் நடத்துகிறீர்களே - நாள்தோறும் கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடத்துகிறீர்களே. தீபாவளி கொண்டாடச் சொல்லுகிறீர்களே. இவற்றால் விலைவாசி குறைந்துவிடுமா?

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக