ஞாயிறு, 16 ஜூலை, 2017

இனவேற்றுமை - ஜாதி வேற்றுமை


இந்து ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர் 1893இல் ‘இந்து’ இதழாசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர் எழுதிய கட்டுரை.

‘மேலை நாட்டு சமூக அமைப்பு, பிறப்பு அடிப்படையிலான சமூக தராதரத்தை ஏற்பதில்லை. அங்கு ஒரு ‘சக்கிலியின்’ மகன் தகுதிப்பாடு, ஒழுக்கம், செல்வம் காரணமாக வேல்ஸ் இளவரசருக்கு ஒத்த சமூக செல்வாக்கை பெற்று போற்றுதலுக்கு உரியவனாக முடியும். ஆனால், இங்கு ஒரு பறையர், வேதங்கள் அனைத்தையும் முற்றொதி ஒழுக்க சீலராகவும், செல்வந்தராகவும் விளங்கினாலும் ஊழலும் மோசடியும் புரியும் பிராமணனுடன் சமத்துவம் கோர முடியாது. இது இந்து ஜாதிய அமைப்பின் வினோதமான தீங்காகும்.’
இதே கருத்தை டிசம்பர் 1904இல் இந்து நாளிதழுக்கு எழுதிய கடிதத்தில் பாரதியாரும் கூறியுள்ளார்.

“பெரும் கொடையாளியான பறையன் ஒருவனை பிராமணத் தரகனைவிடத் தாழ்ந்தவன் என இந்த அதிசயமான ஜாதி அமைப்பு வைத்துள்ளது. இங்கிலாந்தில் செருப்பு தைப்பவனின் மகன் உரிய தகுதி பெற்றால் பிரதம மந்திரியாக வரமுடியும் என்பதைப் பற்றி எவரேனும் சந்தேகப்பட முடியுமா? ஆனால், இந்தியாவில் (பஞ்சமனை விடுங்கள்) ஒரு சூத்திரன் சமஸ்கிருத சாஸ்திரங்களில் இணையற்ற பெரும் புலமையுடன் விழுமிய ஒழுக்கம், பக்தியும் பெற்றிருந்தாலும்கூட சிருங்கேரி சங்கராச்சாரியாரைப் பார்க்க நினைப்பது, துரோகமாகக் கருதப்படவில்லையா? மக்கள் வேண்டுமென்றே கண்களை மூடிக் கொள்கிறார்கள்,’’

(பெ.சு.மணி எழுதிய பெ.சு.மணியன்
கட்டுரைக் கொத்து, பக்.279_280)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக