ஞாயிறு, 16 ஜூலை, 2017

1937-39 ஆச்சாரியார் ஆட்சியில் உத்தியோகங்கள்


ராஜாஜி ஆட்சியில் உத்தியோகங்கள்
கெஜடட் ஆபீசர்

1939_ஆம் ஆண்டின் நிர்வாக அறிக்கையில் உள்ள உத்தியோகப் பட்டியலில் குறிப்பிட்ட புள்ளி விவரம்:
1. கெஜடட் ஆபீசர் என்னும் சற்றேறக் குறையமாதம் ரூ 300-க்கு மேற்பட்டு 500 ரூபாய் வரை சம்பளமுள்ள நிர்வாக இலாகா பெரிய உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார்                        398
பார்ப்பனர்                                           609
2. மாதம் 100 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் உள்ள  உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார்                        2,492
பார்ப்பனர்                                           3,667
3. மாதம் 35 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் உள்ள குமாஸ்தா முதலிய உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார்                        8,042
பார்ப்பனர்                                           9,183
4. மாதம் 35 ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட சம்பளம் உள்ள கீழ்ப்பட்ட பியூன் பங்கா இழுத்தல், எடுபிடி வேலை ஆகிய உத்தியோகங்களில் மாத்திரம்
பார்ப்பனரல்லாதார்     33,662   பார்ப்பனர்  1,513
இந்தப் புள்ளி விவரத்திலிருந்து திரு.ஆச்சாரியார் நடத்திய இரண்டாண்டு கால ஆட்சியில் உத்தியோக மண்டலத்தையே சர்வமும் பூணூல் மயம் ஜகத் என ஆக்கியுள்ளார்.

பியூன்கள் எண்ணிக்கையில்தான்  பார்ப்பனர் அல்லாதார் அதிகம் என்றால், எவ்வளவு கொடுமை இது?

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக